நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கைது.

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 51 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கடந்த 12 மணித்தியாலத்திற்குள் நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, துபாயிலிருந்து இன்று திங்கட்கிழமை (வெப்ரவரி 18) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பெண் உட்பட இருவர், சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவந்த 68,000 வெளிநாட்டு சிரட்டுகள் அடங்கிய 340 சிகரட்டு பெட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணும் ரஸ்நாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனுமே என்று தங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.ர்.
இதேவேளை, துபாயிலிருந்து நேற்று (வெப்ரவரி 17) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய பிரஜை உட்பட இருவர் , சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவந்த 33,000 வெளிநாட்டு சிரட்டுகள் அடங்கிய 165 சிகரட்டு பெட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெலிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரும் இந்தியா நாட்டைச் சேர்ந்த 51 வயதுடைய நபரும் என் தங்கள் வெளியிடப்பட்டுள்ளது,
தற்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.