ஒரு சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை நல்வாய்ப்பாக மாற்றல்: ‘Hyacinthesis’ Accelerator உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

  • TFGL மற்றும் GLX இணைந்து தேசிய நீர் ஆகாயத்தாமரை திட்டத்தின் முதல் அணி அறிவிப்பு
  • இலங்கைக்கு அளவிடக்கூடிய பொருளாதார வளர்ச்சி வாய்ப்பை ஏற்படுத்த நீர் Hyacinth திட்டம்
  • Hyacinthesis செயற்திட்டத்தினூடாக, “1909 ஆம் ஆண்டின் நீர்வாழித் தாவர ஆணை” என்பதில் மாற்றம் ஏற்படுத்த, இலங்கை அரசாங்கம் மற்றும் தனியார் பங்காளர்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுப்பு.

கொழும்பு, இலங்கை, ஜுன் 2026 – சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆகாயத்தாமரையை (ஜப்பான் ஜபர) பொறுப்புடன் நிர்வகிப்பதன் ஊடாக, அதனை ஒரு பெறுமதிமிக்க புதுப்பிக்கத்தக்க மூலப்பொருளாக நிலைநிறுத்துவதற்குச் சுறுசுறுப்புடன் பங்களித்து வருகின்றது. இதற்காக அமெரிக்காவின் Scott Dunn நிறுவனம் மற்றும் ‘Conservation Collective’ ஆகியன ஒன்றிணைந்து, இந்த ஆய்வு மற்றும் வேலைத்திட்டத் தொடருக்கு நிதி அனுசரணை வழங்குகின்றன. இலங்கை சுற்றுச்சூழல் நிதியம் (Lanka Environment Fund) இதன் உள்ளூர் பங்காளராகச் செயற்படுவதுடன், அவர்களின் வழிகாட்டலின் கீழ் ‘The Foundation For A Good Life (TFGL)’ மற்றும் ‘Good Life X (GLX)’ ஆகியவற்றுடன் இணைந்து இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எட்டு மாத காலப்பகுதியைக் கொண்ட, சந்தையை இலக்காகக் கொண்ட ஒரு திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டம், இலங்கையில் தீவிர சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஆகாயத்தாமரையை, நிலையான வாழ்வாதாரமாகவும் சுழற்சிமுறை புத்தாக்க வழிமுறையாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு சாத்தியமான மூலப்பொருளாக ஆகாயத்தாமரையைப் பயன்படுத்துவதில் இலங்கை ஆரம்ப நிலையில் உள்ள போதிலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த கைவினைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் புத்தாக்கவாதிகள் இதற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஏற்கனவே ஆகாயத்தாமரை அடிப்படையிலான கைவினைப் பொருட்களைப் பயன்படுத்தி வரும் நிறுவப்பட்ட வணிகங்கள் மட்டுமன்றி, இதைப்போன்ற ஏனைய இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு பணிபுரியும் அமைப்புகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. இவ்வமைப்புகள் கைவினைத்திறன், பொருள் புத்தாக்கம் மற்றும் சுழற்சி மதிப்புச் சங்கிலிகள் ஆகியவற்றின் ஊடாகப் புதிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, இதுவரை ஆகாயத்தாமரையைக் கொண்டு சோதனைகளை மேற்கொள்ளாதவையாகும்.

இந்தத் திட்டம் தொடர்பில் The Foundation For A Good Life (Guaranteed) Limited இன் வியாபார தலைமை நிபுணர் பிரபுத்த பட்டுவத்த குறிப்பிடுகையில், “accelerator நிகழ்ச்சியின் அணி 1, இலங்கையின் நிறுவன மற்றும் பாரம்பரிய கைவினைஞர் சமூகங்களுடன் இணைந்து செயலாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகாயத்தாமரையை ஒரு முதன்மை மூலப்பொருளாகப் பயன்படுத்தி, சந்தைக்குத் தயாரான கைவினைப் பொருட்கள், ஆடை வடிவமைப்பு மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களை உருவாக்குவதற்கு அவர்களுக்கு இது ஆதரவளிக்கின்றது. சுழற்சித் தன்மையை மனதில் கொண்டு – முறையான வணிகம், வடிவமைப்பு மற்றும் சந்தை ஆதரவுடன் பொருள் புத்தாக்கத்தை இணைப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.” என்றார்.

மிகக் கடுமையான சுருக்கப்பட்டியலிடல் செயல்முறை மற்றும் கள ஆய்வு விஜயங்களைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியிலிருந்து ஆறு [06] சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் (SMEs) இத்திட்டத்தின் முதலாவது அணிக்காக உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்த accelerator திட்டத்தின் முதலாவது அணி, ஆகாயத்தாமரையை ஒரு முதன்மை மூலப்பொருளாகப் பயன்படுத்தி, சந்தைக்குத் தயாரான கைவினைப் பொருட்கள், ஆடை வடிவமைப்பு மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களை உருவாக்குவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள தொழில்முயற்சிகள் மற்றும் கைவினைஞர் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முறையான வணிகம், வடிவமைப்பு மற்றும் சந்தை ஆதரவுடன் பொருள் புத்தாக்கத்தை துல்லியமாக இணைக்கின்றது

பங்குபற்றிய வணிகங்களில் அடங்கியிருந்தவை – இமா வோட்டர் Hyacinth புரொடக்ட்ஸ் – பெலியத்த, ஹம்பாந்தோட்டை (டி. பி. இமல்கா ரசாதி என்பவரால் நடத்தப்படும் ஒரு பிரத்தியேக மற்றும் தனித்துவமான அளவிலான (niche-scale) கைவினைத் தொழில்முயற்சி), Centre for Alternative Technologies (CAT) – நல்லூர், யாழ்ப்பாணம் (ராகுலன் கந்தசாமி என்பவரால் நடத்தப்படும், உள்ளூர் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு), J.J. Products – எஹெட்டுவெவ, குருநாகல் (வடுகே நிலுகா ஜயந்தி என்பவரால் நடத்தப்படும், ஆகாயத்தாமரை கைவினைத் தயாரிப்பில் நீண்டகால அனுபவமும் முதிர்ச்சியும் கொண்ட ஒரு தொழில்முயற்சி), குமாரி அத்கம் – கல்கமுவ, குருநாகல் (ஐ. எம். தம்மிகா பிரியதர்ஷனி குமாரி என்பவரால் நடத்தப்படும், ஆகாயத்தாமரை அடிப்படையிலான கைவினைத் தயாரிப்பில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் நன்கு நிலைபெற்ற ஒரு தொழில்முயற்சி), Sustain U – பண்டாரகம, களுத்துறை (கசுனி சமுதிகா என்பவரால் உருவாக்கப்பட்ட முயற்சி) மற்றும் Pradeepa Eco-Products – பிங்கிரிய, குருநாகல் (மனிக் தேவகே பிரதீபா மதுபானி என்பவரால் உருவாக்கப்பட்ட வளர்ந்து வரும் வணிகம்) போன்றன அடங்கியிருந்தன. நிகழ்ச்சியின் தலைமை செயற்பாட்டாளர் லொனாலி ரொட்ரிகோவினால் வழிநடத்தப்பட்ட பயிற்சிப்பட்டறையுடன் பங்குபற்றுனர்களுக்கான இணைத்துக் கொள்ளும் செயற்பாடு ஆரம்பமாகியது. அதன் போது விநியோக சங்கிலி மற்றும் சந்தைப்படுத்தல் அடிப்படைகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. City School of Architecture – CSA கல்வி நிறுவனத்துடனான கூட்டாண்மையின் ஊடாக நடத்தப்பட்ட தொடர் வடிவமைப்புப் பட்டறையானது, புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கான யோசனைகளைத் திரட்டுவதற்காக இத்திட்டத்தின் பங்கேற்பாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பத்து [10] முதனிலை மாணவர்களை ஒன்றிணைத்தது. அத்துடன், பங்கேற்பாளர்கள் வணிகத் திட்டமிடல், பொறுப்புணர்வுமிக்க மூலப்பொருள் கொள்முதல், புத்தாக்க வடிவமைப்பு மற்றும் சந்தைப்படுத்தல் அடிப்படைகள் ஆகியவற்றில் வழிகாட்டல்களைப் பெறுகின்றனர். இது கூட்டு கற்றலின் ஊடாக மீளுருவாக்கம் செய்யக்கூடிய மதிப்புச் சங்கிலிகளை கட்டியெழுப்புகின்றது.

நிகழ்ச்சின் விற்பனை பங்காளர்களில் Lady J and Pendi, Isla Homeware and Alindaya மற்றும் Resplendent Ceylon ஆகியன அடங்கியிருந்தன.

நிகழ்ச்சியின் செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக, Hyacinthesis செயற்திட்டம் ஒரு கட்டமைப்பு ரீதியான சவாலை எதிர்கொண்டு வருகின்றது. அதுவே, ஆகாயத்தாமரையை இறக்குமதி செய்தல், கைவசம் வைத்திருத்தல் மற்றும் பயிரிடுதல் ஆகியவற்றைத் தடைசெய்வதுடன், அது காணப்படும் இடங்களில் எல்லாம் அழித்தொழிப்பதைக் கட்டாயமாக்கும் 1909 ஆம் ஆண்டின் ஆகாயத்தாமரை அவசரச்சட்டமாகும். ஆக்கிரமிப்புத் தாவரங்களின் முகாமைத்துவமும், சமூக-பொருளாதார மேம்பாடும் ஒன்றுடன் ஒன்று இணங்கிச் செல்லக்கூடியவை என்பதை Hyacinthesis திட்டம் வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளது. தற்போதைய சட்டவாக்கத்தைத் திருத்தியமைக்கும் நோக்கத்துடன், ஒரு தெளிவான மறுசீரமைப்புப் பாதையை வரைபடமாக்குவதற்காக இத்திட்டம், கலாநிதி ஆனந்த மல்லவதாந்திரி மற்றும் கலாநிதி சேத்திகா குணசிறி ஆகியோரை ஈடுபடுத்தியுள்ளது. இலங்கையின் அரசாங்க மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பங்குதாரர்களுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கொள்கை ரீதியான உரையாடல்கள், ஆகாயத்தாமரையை ஒரு ஏற்றுமதி மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான ஒரு பயன்படுத்தப்படாத வளம் ஆகியன குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்துகொள்வதில் தீவிர கவனம் செலுத்துகின்றன.

About GLX

Good Life X (GLX) designs regenerative solutions for South Asia’s transition from extractive to regenerative systems. Since 2018, the organisation has partnered with over 200 businesses across multiple sectors to create strategies where profit and purpose aren’t trade-offs. Through programmes, frameworks, and cross-sector collaboration, GLX guides businesses to operate in ways that restore rather than extract

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *