The new product stack brings together Binance AI, Binance AI Pro, and Binance Agent OS to help people understand financial information, turn ideas into strategies, and build on Binance During a livestreamed event held recently, Binance Co-CEO Richard Teng and VP of Product Jeff Li unveiled Binance Intelligence, an AI product stack built into the…
ஒரே தேசமாக ஒன்றிணையும்போதே அந்நாட்டில் முன்னேற்றம் ஏற்படும் – சபாநாயகர்
பாராளுமன்றத்தில் அனைவருடனும் இணைந்து உண்மையான உற்சாகத்துடன் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதன் ஊடாக மனிதகுலத்தின் உண்மையான அழகும், இலங்கை தேசத்தின் ஒற்றுமையும் பிரதிபலிக்கின்றது என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
ஒரு நாட்டில் அதன் மக்கள் தங்களுடைய கலாசார பன்முகத் தன்மையைப் பாதுகாத்து ஒரே தேசமாக ஒன்றிணையும்போதே அந்நாட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த 15ஆம் திகதி கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டுஉரையாற்றும்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, தைப்பொங்கல் என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, விவசாயம் மற்றும் இயற்கையின் மீது இலங்கையர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமானகொண்டாட்டமாகும் என்றார். நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் பாராளுமன்றப் பணியாளர்கள், பல்வேறு மத மற்றும் கலாச்சார பின்னணிகளைக் கொண்ட ஒரு சமூகத்தைச்சேர்ந்தவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு கலாச்சார பாரம்பரியத்தைப் புரிந்துகொண்டு ஒற்றுமையுடன் இதுபோன்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வது ஒருதனித்துவமான வாய்ப்பு என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
