டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 23 வயதான ஜூலியன் மாதவன் என்ற கொழும்பு 15, ஹெலமுத்து செவண பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவில் வைத்து, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இந்த சந்தேக நபர் நேற்று (21) கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளை காட்டி, மனித படுகொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, இதுவரை இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்ஜீவ குமார சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்ஜீவ துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.