நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் சந்தேகநபர் இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட்.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று (19) புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இன்று(வெப்ரவரி 19) காலை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சூத்திரதாரி மொஹமட் அஸ்மான் சரீப்தீன் எனும் 34 வயது நபர் அடையாளம் காணப்பட்டு புத்தளம் பாலாவி பகுதியில் வேன் ஒன்றில் பயணிக்கும்போது விசேட அதிரடிப்படையினரால்(STF) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் முன்னாள் இராணுவ கொமாண்டோ பிரிவை சேர்ந்தவர் என்றும் அறியப்படுகின்றது.

