Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு.
கனடாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் டொரோண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று(மார்ச் 7) இரவு டொரோண்டோவின் – ஸ்கார்போரோ (Scarborough) நகரத்திலுள்ள டவுன் செண்டர் கேளிக்கை விடுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 12ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிய குற்றவாளி யார் என்று இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் அந்த குற்றவாளியைப் பிடிக்க அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து டொரோண்டோ ஆளுநர் ஒலிவியா சோவ் “இந்த துயர சம்பவத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத்” என தெரிவித்துள்ளார்.