நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கனடா மற்றும் மெக்சிகோவிற்கு இன்று முதல் 25% வரி
மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரி அதிகரிப்பு இன்று (மார்ச் 04) அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையைத் தவிர்க்க முடியுமா என்பது குறித்து பல வாரங்களாக இருந்த சந்தேகங்கள் முடிவுக்கு வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகன் மற்றும் கனேடிய அதிகாரிகள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தாலும், இந்த நடவடிக்கை தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

