கனேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிப்பிரயோகம்.

புத்துக்கடையில் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கனேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ சமரரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ்பிரிவு தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் உடையில் மாறுவேடமிட்ட வந்த துப்பாக்கிதாரி ஒருவர் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிதாரி சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் நீதிமன்றத்திற்குள் கண்டெடுக்கப்பட்ட்டுள்ளது. மேலும் தாக்குதலுக்குப் பின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச்சென்றுள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்குவிசாரணைக்காக சஞ்சீவ இன்று(வெப்ரவரி 19) காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோதே இவ்வாறு துப்பாக்கிச்சுடு இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்உயிரிழந்துள்ளார்.

“கணேமுல்ல சஞ்சீவா” செப்டம்பர் 13, 2023 அன்று நேபாளத்திலிருந்து திரும்பியபோது கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டவராவார்.

இந்த துப்பாக்கிச்சுடு தொடர்பாக மேலதீக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *