காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்…!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையவுள்ளது.

செவ்வாய்க்கிழமையை தவிர ஏனைய 6 நாட்களும் கப்பல் பயணப்படும்.

குறித்த இணையத்தினூடாக பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *