Landmark 1,000th vehicle delivery reflects growing customer confidence in Hayleys Mobility’s future-ready mobility solutions Hayleys Mobility Limited, the mobility segment of Hayleys Fentons Limited, has marked the delivery of its 1,000th vehicle, a milestone achieved within its first 9 months of operation and a clear reflection of the trust Sri Lankan motorists have placed in…
காதல், கவிதை என பெயர் சூட்டிய கமல்.
பாடலாசிரியர் சினேகன் – கன்னிகா தம்பதியினருக்கு கடந்த மாதம் 25-ம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாக தங்களுடைய சமூகவலைத்தளத்தினூடாக ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்கள்.
எப்பொழுதும் கமலை நலன்விரும்பியாக கருதும் சினேகன் தங்கள் குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் வாங்க கமலை நேற்று(வெப்ரவரி 14) குடும்பமாகச்சென்று சந்தித்திருந்தார். அப்பொழுது கமல் இவர்களின் இரு குழந்தைகளுக்கும் ‘காதல்’, ‘கவிதை’ எனக்பெயர் சூட்டி தங்க வளையல்களையும் பரிசளித்துள்ளார்.
இது குறித்து அவர்கள் இவ்வாறு தங்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ”காதலர் தினத்தில் … எங்கள் தங்க மகள்களுக்குத் தங்க வளையல்களோடு, காதல், கவிதை என்ற பெயரையும் அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்புத் தலைவர் பத்ம பூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள். நீங்களும் வாழ்த்துங்கள் காதல் – கவிதை-யை…”