இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நபர்

இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான கேட்டர்ஹாம், உலகின் வயது முதிர்ந்த நபராக அறிவிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்தின் சரேயில் வசிக்கும் எதெல் கேட்டர்ஹாம் என்ற பெண், 115 வருடங்கள் மற்றும் 252 நாட்களாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் வயதான நபராக இருந்துவந்த பிரித்தானிய பெண்ணான இனா கானபரோ லூகாஸ் (116 வயது) மரணமடைந்ததைத் தொடர்ந்து கேட்டர்ஹாம் தற்போது மிகவும் வயதான நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.