கிரிக்கட்டில் புதிய சர்ச்சை ஆரம்பம்? – இந்தியநாட்டு கொடி இல்லாமல் காட்சி தரும் கராச்சி மைதானம்.

8 அணிகள் மோதும் 9வது ICC Champions கிண்ண கிரிக்கெட் போட்டி வெப்ரவரி 19ஆம்திகதி பிற்பகல் 2.30க்கு கராச்சியில் கோலாகலமாக ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் நடப்பு செம்பியனான பாகிஸ்தானும் நியூசிலாந்துதும் மோதுகின்றன.

இந்தமுறை பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. இதில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா பாக்கிஸ்தான் மோதும் முதல் போட்டி இம்மாதம் 23ம் திகதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் போட்டிகள் ஆரம்பமாகும் கராச்சி மைதானத்தில் தொடரில் விளையவுள்ள அணிகளின் நாட்டு தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

மொத்தமாக 8 கொடிகள் இருக்க வேண்டிய இடத்தில் 7 கொடிகள் மாத்திரமே காணப்படுகின்றது. இந்திய கொடியை அவர்கள் அங்கே பறக்கவிடவில்லை.இதற்கான விளக்கத்தையும் இதுவரை பாக்கிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவிக்கவும் இல்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் புதிய சர்ச்சை உருவாகி உள்ளது.

இனம், மொழி, நாடு தாண்டி கிரிக்கெட் என்பது ஒரு கணவான்கள் விளையாடும் விளையாட்டென்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *