நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் கஞ்சிபாணி இம்ரான்
போதைப்பொருள் கடத்தலில் மிக முக்கிய நபராக கருதப்படும், இலங்கையை சேர்ந்த கஞ்சிபாணி இம்ரான், கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த, வனத்துறை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட எட்டு பேர், சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து, 6 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘கோகைன்’ போதைப்பொரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையை சேர்ந்தவர் கஞ்சிபாணி இம்ரான்; சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில், நிழல் உலக தாதா போல செயல்பட்டு வருபவர். கடந்த 2019ல், துபாயில் பதுங்கி இருந்த இவர், இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அந்நாட்டு சிறையில் இருந்து, 2023ல், ஜாமினில் வெளியே வந்து தலைமறைவானார்.
தற்போது அவர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்ஆம்பெட்டமைன் போதைப் பொருளை, கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவது தெரியவந்துள்ளது.
அதற்காக, கடத்தலுக்கான நுழைவு வாயிலாக தமிழகத்தை பயன்படுத்தி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில், தன் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
அவரது பிடியில் கீழக்கரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.” என்றனர்.

