நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு அஸ்வெசும நிச்சயம் – ஜனாதிபதி
குறைந்த வருமானத்தினைக் கொண்ட மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்கள் சந்திப்பொன்றின் போது ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் “நாட்டில் குறைந்த வருமானம் கொண்ட மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழும் மக்கள் உள்ளார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும தொகையில் நாங்கள் மாற்றங்களைச் செய்துள்ளோம்”
8500 ரூபா அஸ்வெசும தொகையைப் பெற்றவர்கள் தற்போது 10 ஆயிரம் ரூபாவைப் பெறுவார்கள். 15ஆயிரம் ரூபா அஸ்வெசும தொகையைப் பெற்றவர்கள் 17500 ரூபாவை அஸ்வெசும நிவாரணமாகப் பெறுவார்கள்.
மேலும், அஸ்வெசும தொகை கிடைக்கப்பெறாத 4 இலட்சம் குடும்பங்கள் இன்னும் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணத் தொகை வழங்கப்படும்.
அத்துடன், முதியோருக்கான கொடுப்பனவு, சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், அஸ்வெசும நிவாரணத் தொகை உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தியுள்ளோம்” என தெரிவித்தார்.

