நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை
எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள மடாலயம் ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (25) பிற்பகல் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொலையை யார் செய்தார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

