கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை

வெல்லவாய, ஊவா குடாஓயா, எதிலிவெவ பகுதியில் தாக்குதலுக்க இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிழந்த நபர் தனது தாயாரை கோடரியால் தாக்க முயன்றதாகவும், கோடரியை அவரது கழுத்தில் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதைப் பார்த்த தாயின் மருமகன் (மகளை மணந்தவர்) தடியொன்றை எடுத்து அவரைத் தாக்கியுள்ளார்.

குறித்த தாக்குதலில் அந்த நபர் வீட்டுக்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

உயிரிழந்த நபர் வீட்டில் வசிப்பவர்களுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக உயிரிழந்த நபரின் மைத்துனரான 45 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர், மேலும் சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஊவா குடாஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

One thought on “கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *