நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் பலி.
கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் தம்புத்தேகம மற்றும் செனரத்க்காம ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் மோதுண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று(வெப்ரவரி 19) காலை இந்த இடம்பெற்றுள்ளதாக தம்புத்தேகம பொலிசார் தெரிவித்துள்ளனர்.
65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

