டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக தெரிவு.

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக புனிதவதி துஷ்யந்தன் நேற்று(மார்ச் 25) தெரிவு செய்யப்பட்டார்.
நேற்று (மார்ச் 25) நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் 2025/2026ஆம் ஆண்டுக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட இவர்,
யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியிலும் கல்வி பயின்ற இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டில் சட்டமாணி பட்டத்தினைப் பெற்று, 2006ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.