நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் கைது
செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெரலுகஹ பகுதியில் 146 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் செவனகல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதுடைய கொளர வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

