நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு திகதி அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு எதிர்வரும் 28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்று வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆறாவது தவணையிலிருந்து $335 மில்லியனைப் பெற உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

