Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
சர்வதேச நிகழ்வு முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் கற்கைகளுக்கான டிப்ளோமா
உலகளாவிய நிகழ்வுகள் தொடர்பான துறையில் விசேட நிபுணத்துவத்தின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், Saegis Campus மற்றும் Pearson UK ஆகியவற்றுடன் இணைந்து ‘Diploma in International Event Management & Marketing Studies’ (சர்வதேச நிகழ்வு முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் கற்கைகளுக்கான டிப்ளோமா) அறிமுகத்தை இலங்கை நிகழ்வு முகாமைத்துவ சங்கம் (EMA) அறிவித்துள்ளது.
இந்த மூலோபாயக் கூட்டாண்மையானது Saegis வளாகத்தின் தலைவர் பண்டார திஸாநாயக்க மற்றும் துணைவேந்தரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் ஆகியோரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த முக்கியமான நிகழ்வில் உரையாற்றிய EMA நிறுவனத்தின் தலைவர் சாலிய வீரசேகர, தொழில்துறையின் மீளெழுச்சித் திறன் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து குறிப்பிட்டார். அவர் இங்கு தெரிவிக்கையில், “ஒருங்கிணைந்த ஒரு குடும்பமாக பல வருட சவால்களை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, இந்த டிப்ளோமா கற்கையை அறிமுகப்படுத்துவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இது கல்விசார் கோட்பாடுகளுக்கும் EMA உறுப்பு நிறுவனங்களின் நடைமுறை ரீதியான தொழில்துறை அனுபவங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு முதன்மையான தகுதியாகும்.” என்றார்.
இந்நிகழ்வின் போது, இது தொடர்பான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) பரிமாறப்பட்டதுடன், முதலாவது டிப்ளோமா பாடநெறியில் பங்குபற்றும் முதல் ஆறு மாணவர்களுக்கான கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
Saegis Campus ஆனது, கல்விக்கான விசேடத்துவத்திற்கு புகழ்பெற்ற, அரச சார்பற்ற பட்டங்களை வழங்கும் ஒரு கல்வி நிறுவனமாகும். நுகேகொடையில் கொழும்பிலிருந்து இலகுவாக அணுகக்கூடிய இடத்தில் அமைந்துள்ள இந்த வளாகம், நவீன கற்றல் வசதிகளுடன் கூடிய இரம்மியமான சூழலைக் கொண்டுள்ளது. மாணவர்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் அதேவேளை, உள்ளூர் மற்றும் உலகளாவிய தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள Saegis வளாகம், வலுவான கல்விக்கான அடித்தளம், நடைமுறை ரீதியான திறன்கள் மற்றும் சுறுசுறுப்பான வளாக வாழ்க்கையை உள்ளடக்கிய நவீன உயர்கல்வி அனுபவத்தை வழங்குகிறது. தந்திரோபாய நுண்ணறிவு மற்றும் தமது திறமைகளைத் தொழில்முறை அபிலாஷைகளை அடைவதற்குப் பயன்படுத்தும் ஆற்றல் கொண்ட அடுத்த தலைமுறை தலைவர்களையும் அறிஞர்களையும் உருவாக்குவதை இந்த வளாகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் புத்தாக்க சிந்தனை மற்றும் வெளிப்படையான தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம் மாணவர்களை ஊக்கப்படுத்தி, நாளைய உலகிற்கு தலைமை தாங்க இந்நிறுவனம் உறுதி பூண்டுள்ளது.