பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை அடையாளம் காணும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச மீன் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்

சர்வதேச மீன் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது
உலக மீன் சந்தையில் 8% பங்கு வகிக்கும் இந்தியா, கடந்த ஆண்டு மீன் ஏற்றுமதியில் 7000 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சர்வதேச மீன் ஏற்றுமதி நாடுகளின் பட்டியலின்படி, கடந்த ஆண்டு, சீனா 67.80 மில்லியன் டன் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்த நிலையில், இந்தியா 18.40 மில்லியன் டன் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது.