A high-level fireside panel featuring Jeff Hoffman, Jeevan Gnanam, Yuen Wong, and the Deputy Minister of Tourism of Sri Lanka, moderated by Cherrie Chan, explored how travel innovation, entrepreneurship, and digital / AI infrastructure can help Sri Lanka compete more effectively on the global stage. Held under the theme “The Sri Lanka Destination Stack –…
சிங்கள பௌத்த கோட்பாடு உள்ள நாட்டில் சிறுபான்மை என்ற குழுக்கள் இருக்க வாய்ப்பில்லை ; திலித் ஜயவீர
சிங்கள பௌத்த கோட்பாடு உள்ள நாட்டில் சிறுபான்மை என்ற குழுக்கள் இருக்க வாய்ப்பில்லை. பௌத்தம் இனவாதத்தை முழுமையாக நிராகரிக்கும் கொள்கையை கொண்டது. இந்த அரசாங்கம் இல்லாத இனவாதத்தை இருப்பதாக குறிப்பிட்டு இனங்களை வேறுப்படுத்தி, முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது என சர்வஜன சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு , வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிங்கள பௌத்த கோட்பாடு உள்ள நாட்டில் சிறுபான்மை என்ற குழுக்கள் இருக்க வாய்ப்பில்லை. அந்தக் கோட்பாட்டுக்கு பௌத்த தர்மமே வழிகாட்டுகின்றது. இந்த நாட்டில் இந்த கோட்பாடுகள் இணைந்த செயற்பாடுகள் உள்ளன. உருவ வழிபாடு என்பது அவசியமற்ற ஒன்று என அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார்.