டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
“சிவாகம கலாநிதி இணுவில் தர்ம சாஸ்தா தானு மஹாதேவ பெருந்தகை இன்று சிவபதமடைந்தார்”

அந்தணர்களின் உயர்வுக்காக பெரிதும் பாடுபட்டவர், குருகுல கல்விமுறை தொடக்கம் பல்வேறு வகையான கல்வி இலக்குகளை அடுத்த சமுதாயத்திற்கு எடுத்து சென்ற சிவாகம கலாநிதி இணுவில் தர்ம சாஸ்தா பெருந்தகை இன்று சிவபதமடைந்தார்.
பாரதத்தின் மைந்தனாக, பல்மொழி ஆளுமை மிக்கவராக, அன்புடன் அனைவரையும் அரவணைக்கும் பண்பாளராக திகழ்ந்தவர். யார் எந்த உதவி கேட்டாலும் உடனே தயங்காமல் அதற்கு வழிவகுப்பார்.
ஒரு ஆசான் எப்படி வாழ வேண்டும் என முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்டியவர்.
இந்தியாவில் உள்ள ஆதீனங்கள், குருகுல அதிபர்கள் உள்ளிட்ட பெரியோரது அன்புக்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவராக திகழ்ந்தவர் இணுவில் தர்ம சாஸ்தா பெருந்தகைக்கு அண்மையில் தருமை ஆதீனம் “சிவாகம கலாநிதி” எனும் கெரவப்பட்டத்தை வழங்கியது. இக்கௌரவத்தினை இந்திய துணை தூதுவர் குருக்கள் அவர்களின் இல்லம் தேடி சென்று வழங்கிமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இந்துக் குருமார் அமைப்பு சார்பில் அன்னாரின் ஆத்மசாந்தியடைய பிராத்திப்பதாக இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவாகமகலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்களும், அமைப்பின் செயலாளர் சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்களும் முன்னின்று அறிக்கையொன்றை தெரிவித்ததுடன், தங்கள் தலா துயரையும் பகிர்ந்திருக்கின்றார்கள்..
