இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
சீரற்ற காலநிலையால் நீடிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை.

சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் ஹாலியால, பசறை, கந்தகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, உவபரணகம மற்றும் சொரணதொட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பகுதியில் 01 ஆம் கட்டத்தின் கீழ் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.