திருகோணமலைப் பொது நூலக கேட்போர்கூடத்தில் நேற்று (மார்ச் 15) திருகோணமலை தமிழ்ச் சங்கத்திற்கான புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டது.
சுமார் பத்து ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த திருக்கோணமலைத் தமிழ்ச் சங்கம் கேணிப்பித்தன் (அருளானந்தம்) ஐயாவின் மூலம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தஇந்த சங்கத்தின் தலைவராக திருமலை நவம்(நவரட்ணம் – முன்னாள் அதிபர் மற்றும் எழுத்தாளர்), செயலாளராக சி. காண்டீபன் (பள்ளி ஆசிரியர்) பொருளாளராக மு.மு.மு. முகைஸ் (பள்ளி முதல்வர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
துணை தலைவராக கவிஞர் க. யோகானந்தம், துணை செயலாளராக கவிஞர் தி. பவித்திரன் , உறுப்பினர்களாக அதிபர் சுஜந்தினி யுவராஜா, ஆசிரியர் அ. ரவீந்திரன், எமுத்தாளர் கதிர், திருச்செல்வம், கவிஞர் எஸ். ஆர். தனபாலசிங்கம், கவிஞர் எஸ். சிவசங்கரன், ஊடகவியலாளர் அ. அச்சுதன், சமூக செயற்பாட்டாளர் T. கோபகன், ஆசிரியர் மர்ளியா சக்காப், நூலகர் ந. யோகேஸ்வரன், எமுத்தாளர் அருஷா ஜெயராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தருணத்தில் தமிழ்ச்சங்கத்தின் இளைஞர் அணியும் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) இந்திய தமிழ் சினிமாவில் வெளிவந்த பெருசு திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இலங்கை நாட்டின்…
தெஹிவளையில் இரண்டு மாடி கட்டடம் கொண்ட நிலத்தை குத்தகைக்கு எடுக்க போலி பத்திரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணைகள் தொடர்பாக இவ்வாறு…
சென்றவாரம் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை, சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில்…
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சுகவீனமின்மையால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தற்பொழுது நலமுடன் இருப்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன்…
கடந்த வருடம் ஜூன் மாதம் 5ம் திகதி BOEING "starliner" விண்வெளிக்கு ஏவப்பட்டது. அடுத்த தினமான 6ம் திகதி "STARLINER"…
Toyota Lanka (Pvt) Ltd., a leading name in the automotive industry, celebrated the exceptional efforts…