இலங்கை, கொழும்பு, 2026 மே 26: DSI Samson குழுமத்தின் ஒரு அங்கமான Samson Trading Company (Pvt) Ltd. நிறுவனம், மாலபேயில் தனது புதிய TVS காட்சியறையை மே 23 ஆம் திகதி திறந்து வைத்ததன் மூலம், TVS Lanka (Pvt) Ltd. நிறுவனத்துடனான தனது உத்தியோகபூர்வ விநியோகஸ்தர் சேவையை ஆரம்பித்துள்ளது. இக்கூட்டாண்மையானது, Samson Trading Company (Pvt) Ltd. நிறுவனம் மோட்டார் சைக்கிள் துறைக்குள் நுழைவதற்கான ஒரு மூலோபாய விரிவாக்கத்தைக் குறிப்பதுடன், DSI Samson…
சுமார் 10 ஆண்டுகளாக முடங்கி கிடந்த திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக திருமலை நவம் தெரிவு.
திருகோணமலைப் பொது நூலக கேட்போர்கூடத்தில் நேற்று (மார்ச் 15) திருகோணமலை தமிழ்ச் சங்கத்திற்கான புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டது.
சுமார் பத்து ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த திருக்கோணமலைத் தமிழ்ச் சங்கம் கேணிப்பித்தன் (அருளானந்தம்) ஐயாவின் மூலம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தஇந்த சங்கத்தின் தலைவராக திருமலை நவம்(நவரட்ணம் – முன்னாள் அதிபர் மற்றும் எழுத்தாளர்), செயலாளராக சி. காண்டீபன் (பள்ளி ஆசிரியர்) பொருளாளராக மு.மு.மு. முகைஸ் (பள்ளி முதல்வர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
துணை தலைவராக கவிஞர் க. யோகானந்தம், துணை செயலாளராக கவிஞர் தி. பவித்திரன் , உறுப்பினர்களாக அதிபர் சுஜந்தினி யுவராஜா, ஆசிரியர் அ. ரவீந்திரன், எமுத்தாளர் கதிர், திருச்செல்வம், கவிஞர் எஸ். ஆர். தனபாலசிங்கம், கவிஞர் எஸ். சிவசங்கரன், ஊடகவியலாளர் அ. அச்சுதன், சமூக செயற்பாட்டாளர் T. கோபகன், ஆசிரியர் மர்ளியா சக்காப், நூலகர் ந. யோகேஸ்வரன், எமுத்தாளர் அருஷா ஜெயராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தருணத்தில் தமிழ்ச்சங்கத்தின் இளைஞர் அணியும் உருவாக்கப்பட்டுள்ளது.