இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய முறை.

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த தெரிவித்தார்.
இன்று (05) நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சமூக நலத் திட்டமும் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்காக 100 சுற்றுலாத் தலங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் ,அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு சுற்றுலா தலத்திற்கும் ரூ.10 மில்லியன் ஒதுக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சுற்றுலாப் பயணிகளுக்காக ஓய்வு மையங்களைக் கட்டவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.