IPL 18வது சீசனின் 51ஆவது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ்(GT) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்(SRH) அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற SRH பந்துவீச்சை தேர்வு செய்தது. GT நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக ஆடி அரை சதமடித்த சுப்மன் கில் 76 ஓட்டங்களுடனும், பட்லர் 37 பந்தில் 64 ஓட்டங்கள் எடுத்ததோடு, சாய் சுதர்சன் 23 பந்தில் 48 ஓட்டங்கள் குவித்தார். SRH சார்பில்…
சூடு பிடித்துள்ள IPL – 51வைத்து போட்டியில் புள்ளி பட்டியலில் மாற்றம்

IPL 18வது சீசனின் 51ஆவது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.
இதில் குஜராத் டைட்டன்ஸ்(GT) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்(SRH) அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற SRH பந்துவீச்சை தேர்வு செய்தது.
GT நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ஓட்டங்களை குவித்தது.
சிறப்பாக ஆடி அரை சதமடித்த சுப்மன் கில் 76 ஓட்டங்களுடனும், பட்லர் 37 பந்தில் 64 ஓட்டங்கள் எடுத்ததோடு, சாய் சுதர்சன் 23 பந்தில் 48 ஓட்டங்கள் குவித்தார். SRH சார்பில் உனத்கட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதையடுத்து, 225 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் SRH களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினார்
அரை சதம் கடந்த அவர் 41 பந்தில் 74 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஏனைய முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில், SRH 186 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.
இது குஜராத் அணியின் 7வது வெற்றி ஆகும்.இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு குஜராத் அணி முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.