நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் மீட்ப்பு நடவடிக்கை.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கண்காணித்துள்ளார்.
அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் சிக்கிய பேருந்திலுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது.
கடற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் அதிகாலை வேளையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் விமான படையின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட அரங்கில் ஜனாதிபதி நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.



