For more than three decades, Selyn Group has continuously evolved by responding to the realities of the communities connected to its operations. Since its founding in 1991 as a small handloom enterprise, Selyn has grown into a diversified fair-trade business spanning ethical manufacturing, retail, exports, sustainable product innovation, and community development. At the heart of…
ஜப்பான் ஜபர (Water Hyacinth) ஊடாக வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் ‘Hyacinthesis’ ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்
- இலங்கையின் குறைந்துவரும் உயிரியல் பரம்பல் மற்றும் நீரின் தரம் வீழ்ச்சியடைவதற்கு ஜப்பான் ஜபர (Water hyacinth) தாவரங்கள் பாரிய அச்சுறுத்தலாக விளங்குவதுடன், இவை விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் நீண்டகால ரீதியில் பொருளாதார ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
- நிலைபேறான வீட்டுப்பாவனைப் பொருட்கள் / இயற்கை நாரிலான உற்பத்திப் பொருட்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருவதுடன், 2030 ஆம் ஆண்டளவில் இதன் சந்தைப் பெறுமதி 60 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தற்போது உயர்தர கொள்வனவாளர்கள், ஜப்பான் ஜபர (Water hyacinth) கொண்டு தயாரிக்கப்பட்ட கூடைகள் மற்றும் அலங்காரப் பொருட்களை தலா 20 முதல் 80 அமெரிக்க டொலர்கள் வரையிலான விலையில் சில்லறை விற்பனை செய்து வருகின்றனர்.
கொழும்பு, இலங்கை, ஜனவரி 2026 – The Foundation For A Good Life (Guarantee) Limited (TFGL), ஆனது Good Life X (GLX) உடன் கைகோர்த்து, அண்மையில் ‘Hyacinthesis’ ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தது. எட்டு மாத கால, சந்தை செயற்படுத்தல் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டம், இலங்கையின் அதிகரித்துச் செல்லும் ஜப்பான் ஜபர (Water hyacinth) சிக்கலை, நிலைபேறான வாழ்வாதார மற்றும் சுழற்சி புத்தாக்கமாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Scott Dunn, The Conservation Collective மற்றும் இலங்கை சுற்றாடல் நிதியம் – LEF ஆகியவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டமானது, இலங்கையின் நீர்வழிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஜப்பான் ஜபர (Water hyacinth) தாவரத்தின் தாக்கத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஊடுருவும் தாவரமானது நாட்டின் நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரின் தரம் ஆகியவற்றிற்குப் பெரும் சவாலாக விளங்குகின்றது. இத்துரிதப்படுத்தும் செயற்திட்டமானது, 2026 ஆம் ஆண்டில் இலங்கை முழுவதிலுமுள்ள தொழில்முயற்சியாளர்கள் மற்றும் கைவினைஞர் சமூகங்களுடன் இணைந்து, ஜப்பான் ஜபர (Water hyacinth) ஐ பயன்படுத்தி சந்தை வாய்ப்புள்ள உற்பத்திப் பொருட்களை உருவாக்கவுள்ளது. இது மூலப்பொருள் ரீதியிலான புத்தாக்கத்தை, முறையான வணிகம், வடிவமைப்பு மற்றும் சந்தை வாய்ப்பு ரீதியிலான ஆதரவுடன் ஒருங்கிணைக்கவுள்ளது.
‘Hyacinthesis’ துரிதப்படுத்தும் செயற்திட்டமானது, ஜப்பான் ஜபர (Water hyacinth) இனை பெறுமதிமிக்க மற்றும் மீளுற்பத்தி செய்யக்கூடிய ஒரு மூலப்பொருளாக மறுசீரமைப்பதன் மூலம் இந்தச் சவாலை எதிர்கொள்கிறது. இத்திட்டமானது, இந்த மூலப்பொருளைப் பயன்படுத்திச் செயற்படும் ஆறு தொழில்முயற்சிகளை இனங்கண்டு, அவற்றினை வலுப்படுத்தி, மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும். இதன் முதலாவது தொகுதியானது, அபாயம் குறைந்த ஆரம்பப் புள்ளியாக கைவினைப்பொருட்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. அதேவேளை, காகிதம், பொதியிடல் முறைகள், உரம் மற்றும் பயோச்சார் (Biochar) போன்ற எதிர்காலப் பயன்பாடுகளுக்கான அடித்தளத்தையும் இடுகின்றது. இத்திட்டத்தின் ஆரம்பமானது, நீர்நிலைகளில் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆரம்பகட்ட ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
The Foundation For A Good Life (Guarantee) Limited இன் நிகழ்ச்சித் திட்ட தலைமை அதிகாரி லொனாலி ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு விற்பனை நிலையமும், மாற்றியமைக்கப்பட்ட வியாபார மற்றும் அலங்காரத் திட்டம், ஆலோசனை வழிகாட்டல்கள், தொழில்னுட்ப மற்றும் வடிவமைப்பு ஆதரவு மற்றும் வினைத்திறனுடன் ஒன்றிணைக்கப்பட்ட மைல்கல் பூர்த்தியின் அடிப்படையில் நிதி வழங்கல் போன்றவற்றை பெறும். அர்ப்பணிக்கப்பட்ட விற்பனை பங்காளர்களினூடாக உள்நாட்டு சந்தையில் பூர்த்தி செய்யப்பட்ட பொருட்கள் விநியோகிக்கப்படும் என்பதுடன், நிகழ்ச்சித் திட்டத்தின் சந்தை-முதன்மை வழிமுறை மீளுறுதி செய்யப்படும்.” என்றார்.
ஜப்பான் ஜபர (Water hyacinth) உடன் செயலாற்றும் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூக உற்பத்தியாளர்களுக்கு பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். வடிவமைப்பாளர்கள், தொழில்னுட்ப நிபுணர்கள் மற்றும் கொள்வனவாளர்களுடன் பங்குபற்றுனர்கள் நெருக்கமாக செயலாற்றி, உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்து, சந்தையில் நிலவும் கேள்வியை நிவர்த்தி செய்யக்கூடிய வாய்ப்புக் கிடைக்கும்.
‘Hyacinthesis’ துரிதப்படுத்தும் செயற்திட்டமானது, வெறும் உற்பத்திப் பொருட்களை உருவாக்குவது மட்டுமன்றி, ஒரு மீளுற்பத்தித் திறன்மிக்க பெறுமதித் தொடரை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இலங்கையின் சுற்றுச்சூழல் சவாலை எவ்வாறு புத்தாக்கம், வாழ்வாதாரம் மற்றும் நீண்டகால மீளெழும் திறன் ஆகியவற்றுக்கான ஒரு உந்துசக்தியாக மாற்ற முடியும் என்பதைச் சான்றாதாரத்துடன் மெய்ப்பிக்கின்றது.
Lodi777com is my go-to when I’m bored. Always a good time. Give lodi777com a try, you’ll love it.
Alright, check it, heard some buzz about lucky167game. Gonna give it a spin and see what all the fuss is about. Fingers crossed for some good luck You know, the kind that makes you grin like a Cheshire cat. lucky167game
Trying out pkr777login tonight. Hoping to find some good poker action and maybe win a few bucks. Let’s see if my poker face holds up online. pkr777login