சகோதர மற்றும் சகோதரிகள் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும் விளையாட்டு, இசை மற்றும் கேளிக்கைக்காக ஒன்றுசெரும் உன்னத தருணம் ஆகஸ்ட் 30ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பிலுள்ள CR&FC மைதானத்தில் மீண்டும் கோலாகலமான நிகழ்ச்சியொன்று அரங்கேறுகிறது. அன்றைய தினம் பாடசாலைகளின் பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும் இணைந்த ரக்பி அணிகள் களமிறங்கி, தலைசிறந்த இசைக்குழுக்கள் மற்றும் DJ கலைஞர்களின் இசைவெள்ளத்தில் குடும்பங்கள் சகிதம் குதூகலித்து மகிழக்கூடிய பிரத்தியேகமான தருணம் உருவாகிறது. அணிக்கு ஏழு பேர் கொண்ட…
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் விசேட அறிவிப்பு

இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை ஆட்பதிவாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியாவில் உள்ள கிளைகளில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது