டிரம்ப் – எலான்கூட்டணி – சூடுபிடிக்கும் அரசியல் அரசியல்களமும்.

எப்போதும் வெளிப்படையாக தனது கருத்தினை முன்வைப்பவரும் , கொலை முயட்சியில் இருந்து தப்பியவருமான பிரபல எழுத்தாளர் சல்மான் ருஸ்டி, கருத்து மற்றும் எழுத்துச்சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நேரடியாக அமெரிக்காவின் கோடீஸ்வரர் எலான் மஸ்க்கை சாடி தெரிவித்துள்ளார்.

மஸ்க்கின் எக்ஸ் தளம் உண்மையாகவே கருத்து சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றதா? என்ற கேள்விக்கு, எலன் மஸ்க் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு பதில் அதற்கு இடையூறு விளைவிக்கின்றார் என எழுத்தாளர் சல்மான் ருஸ்டி கருத்து வெளியிட்டுள்ளார்.

மஸ்க் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை எனவும், அவரது சமூக வலையமைப்பு தீவிரவலதுசாரிகளிற்கு ஆதரவான கருத்துருவாக்கத்தில் ஈடுபடுகின்றது எனவும் தெரிவித்துள்ள சல்மான் ருஸ்டி, எலான் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் உன்னதமான பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துக்கொண்டே அதற்கு எதிராக செயற்படுவது நேர்மையற்ற விடயம் எனவும், செவ்வாய்கிரகத்திற்கு செல்லும் முதல்மனிதனாக எலான் மஸ்க் விளங்கவேண்டும் என நான் விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் தனக்கும் உள்ள கருத்துவேறுபாடுட்டினை வெளிப்படுத்தும் விதத்தில் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ‘தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்” என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதியாக தன்னை யாராவது மாற்றவிரும்பினால் அது நடைபெறாது என குறிப்பிட்டுள்ளது, எலான் உடனான ட்ரம்பின் நட்பைகுறிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே ஒரு நிலைப்பாட்டில்தான் அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் மேட்கொள்ள ஆரம்பித்தனர்.

இந்நிலை தொடருமா இருந்தால் அமெரிக்க அரசியல் களத்தில் விரிசல்கள் ஏற்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *