உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது. கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…
டேன் பிரியசாத் கொலைக்கும் சகோதரரின் கொலைக்கும் தொடர்பா?

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய காவல்துறையினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்தனர்.
இந்தக் கொலை சம்பவத்தில் பந்துல பியால் மற்றும் மாதவ சுதர்சன எனும் தந்தை, மகன் இருவர் மீதும் விசாரணைகளின் போது சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த இருவரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும், அவர்களின் தொலைபேசி அழைப்புக்களைப் பதிவு செய்யவும் உத்தரவிடுமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, இருவரும் நாட்டைவிட்டு வெளியே செல்வதைத் தடுக்கும் வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்குக் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவல உத்தரவிட்டார்.
மேலும், சுட்டுக்கொலை செய்யப்பட்ட டேன் பிரியசாத்தின் சகோதரரான திலின பிரியசாத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் இன்னும் நீதிமன்றத்தில் குறித்த தந்தை மகனுக்கு எதிராக நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுவரை 10 பேரிடம் சாட்சியம் பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடரும் எனவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நீதவான் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.