Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
டேவிட் பீரிஸ் சோலர் நிறுவனம் HNB உடன் கைகோர்த்து புதுப்பிக்கத்தக்க வலுத் தீர்வுகளை ஊக்குவிக்க முன்வந்துள்ளது
டேவிட் பீரிஸ் குழுமத்தின் சோலர் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுப் பிரிவான David Pieris Renewable Energy (Private) Limited (DPRE), ஹற்றன் நஷனல் வங்கியுடன் மூலோபாய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. அதனூடாக, இல்லங்கள், வணிக மற்றும் தொழிற்துறைகளின் வாடிக்கையாளர்களுக்கு சோலர் வலுத் தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு HNB கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை HNB தலைமையகத்தில் இரு நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. இதில், HNB இன் நுகர்வோர் வங்கியியல் பிரிவின் தலைமை அதிகாரி – சிரேஷ்ட உப தலைவர் காஞ்சன கருணாகம, சிரேஷ்ட நிறைவேற்று உப தலைவர் – பிரதம செயற்பாட்டு அதிகாரி சஞ்ஜய் விஜேமான்ன, தனிநபர் நிதிச் சேவைகள் முகாமையாளர் அசித பெர்னான்டோ மற்றும் DPRE சார்பாக பணிப்பாளர் சமந்த சில்வா, நிதி, மூலோபாயம் மற்றும் செயற்பாடுகள் பொது முகாமையாளர் லஹிரு விதாரன, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உதவிப் பொது முகாமையாளர் பிரசன்ன திசாநாயக்க மற்றும் திட்டமிடல் மற்றும் செயற்பாடுகள் முகாமையாளர் தில்ஷான் ஜயசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த கைகோர்ப்பினூடாக வாடிக்கையாளர்களுக்கு DPRE இனால் வழங்கப்படும் உயர் தரம் வாய்ந்த மற்றும் நம்பகமான சோலர் வலுத் தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு HNB இடமிருந்து வசதியான மற்றும் நம்பிக்கையை வென்ற நிதிவசதியளிப்பு தீர்வுகள் வழங்கப்படும். இல்லங்களுக்கான சோலர் தீர்வுகளுக்கு வழங்கப்படும் கடன் வசதிகள் ரூ. 500, 000 முதல் ரூ. 7,000,000 வரை அமைந்திருப்பதுடன் வணிக மற்றும் தொழிற்துறைகளுக்கான நிதிவசதியளிப்பு, வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் செயற்திட்டத்தின் தன்மைக்கேற்ப வேறுபடும்.
ஏழு (7) வருடங்கள் வரை கடனை மீளச் செலுத்துவதற்கு வசதி வழங்கப்படுவதுடன், தெரிவு செய்து கொள்ளக்கூடிய மீளச்செலுத்தும் காலப்பகுதிக்கமைவான கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் வழங்கப்படும். இந்த நெகிழ்ச்சியான நிதிவசதியளிப்பினூடாக இல்லங்கள், வியாபாரங்கள் மற்றும் தொழிற்துறை வாடிக்கையாளர்களுக்கு சுமூகமாக, வெளிப்படையாக, நம்பகமாக புதுப்பிக்கத்தக்க வலுப் பாவனைக்கு மாறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டேவிட் பீரிஸ் குழுமத்தின் 40 வருட கால நம்பிக்கை மற்றும் DPRE இன் உறுதியான தொழில்நுட்ப நிபுணத்துவம், உறுதி செய்யப்பட்ட தொழிற்துறை சாதனைகள் மற்றும் சோலர் தீர்வுகளை வழங்குவதில் காணப்படும் நிபுணத்துவம் ஆகியவற்றுடன் HNB இன் பரந்த வங்கியியல் வலையமைப்பு மற்றும் நிதி உறுதித்தன்மை ஆகியன இணைந்து, நாடு முழுவதிலும் சோலர் வலுவை பின்பற்றச் செய்வதை பெருமளவு அதிகரிக்கச் செய்வதாக அமைந்திருக்கும்.
2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க வலு மூலங்களிலிருந்து 70% ஆன மின்சாரத்தை பிறப்பிக்கும் இலக்கை எய்துவது மற்றும் 2050 ஆம் ஆண்டளவில் பூஜ்ஜிய காபன் வெளியீடு என்பன அடங்கலான, இலங்கையின் தேசிய வலு இலக்குகளுடன் இந்த கைகோர்ப்பு உறுதியாக பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. அதனூடாக பசுமையான எதிர்காலத்தையும், நிலைபேறான விருத்தியையும் ஏற்படுத்துவதற்கான இரு நிறுவனங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மீளுறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு 0114700 440 தொடர்புகொள்ளவும் அல்லது www.dpre.lk பார்வையிடவும்