நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தபால் வாக்காளர்களுக்காக ‘ஈ’ சேவை வசதி
தபால் வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்தும் இடம் மற்றும் சான்றளிக்கும் அதிகாரியை அடையாளம் காண உதவும் வகையில் ‘ஈ’ சேவை ஒன்று நடைமுறையில் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும், அவர்களின் குழுக்கள் மற்றும் கட்சிகளையும், அவர்களின் சின்னங்களையும் அடையாளம் காண எளிதாக்கியுள்ளது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
eservices.elections.gov.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து தேர்தல் ‘ஈ’ சேவையை அணுக முடியும் எனவும் அதில் அரச அதிகாரிகளுக்கான தபால் வாக்களிப்பு தகவல்களுக்கான இணைப்பை அணுகி தகவல்களை பெற்றுக் கொள்ளமுடியும்.

