டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
தரமான சம்பவம் லோடிங்… குட் பேட் அக்லி டிரைலரில் இதை கவனித்தீர்களா..

நடிகர் அஜித் – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் நேற்று இரவு 9 மணிக்கு வெளிவந்தது

முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் படமாகவே இப்படத்தை ஆதிக் எடுத்துள்ளார். ஒத்த ரூபா தரேன் பாடலில் துவங்கிய இந்த டிரைலர், This Is My F**king Game என அஜித்தின் மங்காத்தா வசனத்தை வில்லன் அர்ஜுன் தாஸ் சொல்வது, அவன் பயத்துக்கே பயம் கற்றவேன், இருங்க பாய் போன்ற வசங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் ஜி.வி. பிரகாஷ் இந்த டிரைலருக்காக செய்திருந்த மிக்சிங் செம மாஸாக இருந்தது. கண்டிப்பாக முதல் நாள் திரையரங்கம் தெறிக்கப்போகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை
இந்த டிரைலரில் த்ரிஷா, பிரபு, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, சைன் டாம் சாக்கோ என அனைவரும் வந்தாலும், யாரும் எதிர்பார்க்காத விதமாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராஃப் எண்ட்ரி கொடுத்தார்

தமிழில் ஆரண்யா காண்டம், பிகில் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் டிரைலரின் இறுதியில் நடிகை சிம்ரனின் எண்ட்ரியும் சூப்பராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
