நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தாய்லாந்துக்கு விதிக்கப்பட்ட புதிய பரஸ்பர வரி – அமெரிக்க விரையும் தாய்லாந்து துணை பிரதமர்.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதிய பரஸ்பர நிலைப்பாட்டையும், அதற்கேற்ற அதிகரித்த விகிதத்தினையும் சர்வதேசத்திற்கு அறிவித்திருந்தார்.
அதில் தாய்லாந்தின் ஏற்றுமதியில் 36வீத புதிய பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்காவின், வர்த்தகக் கொள்கை தொடர்பான தாய்லாந்தின் நிலைப்பாடு குறித்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
மின்னியல், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற முக்கியத் துறைகளில் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்
இந்த விளைவுகளைத் தணிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Pichai Chunhavajira அடுத்த வாரம் அமெரிக்காவிற்குச் சென்று, அரச மற்றும் வணிகப் பங்குதாரர்களைச் சந்தித்து, ஒரு ஏற்றுமதியாளராக மட்டுமல்லாமல், நம்பகமான நீண்டகால பொருளாதார பங்காளியாகவும் உள்ள தாய்லாந்தின் பங்கை, அமெரிக்கா பிரதிநிதிகளுக்கு எடுத்துக்கூறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

