தியலும நீர்வீழ்ச்சியில் யாரும் எதிர்பாராத சம்பவம்.

ஊவா மாகாணத்திலுள்ள தியலும நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கியதை அங்கிருந்தவர்கள் பதட்டப்பட்டதை அவதானித்து தெரிந்துகொண்ட மலேசிய Farah Putri Mulyani என்ற பெண் சுற்றுலாப் பயணி விரைந்து அவரை காப்பாற்றினார்.

இந்த நிகழ்வு எதேர்ச்சையாக சுற்றுலாப்பயணி பயன்படுத்திய கேமராவில் காணொளியாக பதிவாகி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆபத்தை உணர்ந்து தன் உயிரை பணயம் வைத்து இளைஞனை கைப்பற்றிய சுற்றுலாப்பயணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

வெயில் களங்களில் நீர்நிலைகளில் நீராடப்போவபர்கள் அவதானமாக இருக்கவேண்டும், முன்னர் அறியாத இடங்களில் நீராடச்செல்லும் பொது அவ்விடத்தைப்பற்றி அறிந்த வழிகாட்டிகளோடு செல்வது சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *