திலிண களுதொடகேவினால்வேகத்தில், தூரத்திலும் வித்தியாசப்பட்ட இரண்டு அம்சங்கள் ஒரு புகைப்படத்தில் – இலங்கை புகைப்பட கலைஞரின் கைவண்ணம்.

இலங்கை புகைப்பட கலைஞர் திலிண களுதொடகேவினால் பெப்ரவரி 4ம் திகதி கொழும்பில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டபின் தற்போது அந்த புகைப்படம் பேசுபொருளாகியுள்ளது.

பூமியில் இருந்து சந்திரனுக்கு 3,97,000 கிலோமீற்றர் தூரம் இடைவெளி, அதேநேரம் Airbus A330 விமானமொன்று பூமியில் இருந்து 38 ஆயிரம் அடி உயரத்தில், மணித்தியாலத்துக்கு 915 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கும். இவ்விரண்டையும்
ஒரே கமெராவுக்குள் மிக லாவகமாக அடக்கி அட்டகாசம் படம்பிடித்துள்ளார்.

இவரது இன்ஸ்டா பக்கத்தில் பிரம்மிக்கத்தக்க பல தருணங்களை பதிவிட்டுள்ளார். அவரது கலை உணர்வுக்கு வாழ்த்துகள்.

அவரது இன்ஸ்டா பக்கம் இணைக்கப்பட்டுள்ளது.

https://www.instagram.com/thilina_kalu/?hl=en

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *