டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை

பலாலி – தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதிகளில் நாளை வரை சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு சில தரப்பினருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 27 தரப்பினருக்கு எதிராக இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தையிட்டி விகாரைக்கு அருகிலோ, அதன் நுழைவாயில், வீதியிலோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது எனவும் சட்டவிரோத ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ பெயர் குறிப்பிட்ட நபர்களால் நடத்தப்படக் கூடாது எனவும் நீதிமன்றின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.