The new product stack brings together Binance AI, Binance AI Pro, and Binance Agent OS to help people understand financial information, turn ideas into strategies, and build on Binance During a livestreamed event held recently, Binance Co-CEO Richard Teng and VP of Product Jeff Li unveiled Binance Intelligence, an AI product stack built into the…
தீ விபத்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலைக்கு விஜயம் செய்த ஜீவன் தொண்டமான்..!
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா–லக்சபான தேயிலை தொழிற்சாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் தொழிற்சாலை கடுமையாக சேதமடைந்தது.
லக்சபான தேயிலை தொழிற்சாலை தீ விபத்து தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தமைக்காக ஜீவன் தொண்டமானுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொண்ட பிரதி பொது முகாமையாளர் துசான் ஹேரத், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தேயிலை தொழிற்சாலையை முழுமையாக மீள்புனரமைத்து, வழமைபோல் தேயிலைத் தூள் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
லக்சபான, வாழமலை, எமில்டன், முள்ளுகாமம் மே.பி, முள்ளுகாமம் கீ.பி ஆகிய ஐந்து தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 772 தொழிலாளர்கள் தினசரி பறிக்கும் தேயிலை கொழுந்துகள், 75 தொழிற்சாலை தொழிலாளர்களால் லக்சபான தேயிலை தொழிற்சாலையிலேயே தேயிலைத் தூளாக உற்பத்தி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்தினால் தற்காலிகமாக செயலிழந்திருந்த லக்சபான தேயிலை தொழிற்சாலை, தற்போது புதிய மாற்றங்களுடன் மீள்புனரமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்கள் லக்சபான தேயிலை தொழிற்சாலைக்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு, தீ விபத்து தொடர்பாகவும், தற்போது இடம்பெற்று வரும் மீள்புனரமைப்பு பணிகள் குறித்தும் லக்சபான தோட்ட பிரதி பொது முகாமையாளர் துசான் ஹேரத் அவர்களுடன் கலந்துரையாடி விபரங்களை கேட்டறிந்தார்.
Ey yo! Just browsed through x88win. It’s… there. Not particularly impressive, but not awful either. Worth a look if you’re bored. Let me know your thoughts! Check it out here: x88win