நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தென்னை உரிமையாளர்களுக்கான புதிய அறிவிப்பு
தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை இந்த மாத இறுதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
இதற்காக 5,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உர மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் 56,700 மெற்றிக் தொன் உரம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

