கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
தேசபந்துவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு : உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாட்டை தள்ளுபடி செய்தமை சட்டத்திற்கு எதிரானது என கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2022 மே 9ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த “Gotta go home” போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, மேல் மாகாணத்தின் அப்போதைய சிரேஸ்ட பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக போராட்டக்காரர் ஒருவர் தனிப்பட்ட வகையில் முறைப்பாடு தாக்கல் செய்தார்.
அந்த தனிப்பட்ட முறைப்பாட்டை தள்ளுபடி செய்ய அப்போதைய கொழும்பு தலைமை நீதிபதி எடுத்த தீர்மானம், சட்டத்திற்கு எதிரானது என கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போராட்டக்காரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த பின்னரே, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவினால் இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.