நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்.
யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் இன்று (மார்ச் 20) மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் தேசிய மக்கள் சக்தி தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தது.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெ.ரஜீவன் உள்ளிட்ட 17 சபைகளுக்கான முதன்மை வேட்பாளர்கள் வருகைதந்தனர்.
அத்தோடு,உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் காலம் இன்று (மார்ச் 20) மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

