Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
தேபந்துவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ்மா தேசபந்து தென்னகோன், நேற்று காலை தனது சட்டத்தரணிகளுடன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (19) சரணடைந்திருந்தார்.
அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (20) வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
குறித்த உத்தரவுக்கு அமைவாக தேசபந்து தென்னகோன் நேற்று மதியம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
அதற்கமைய, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (20) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
