உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
நல்லூரான் தெற்கு வாசல் வளைவு

எம்பெருமான் முருகப்பெருமானுக்கே உரித்தான தைப்பூச(11.02.2025) நன்னாளில் தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் அலங்காரக்கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலய அமைப்பின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் தெற்கு கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான “நல்லூரான் தெற்கு வாசல் வளைவு” காண்பிய விரிப்பு கண்டது.
இந்த தெற்கு வாசல் வளைவு அமைப்பானது யாழ்ப்பாணத்து கந்தபுராண கலாச்சாரத்தை எடுத்தியம்புவதாக அமையப்பெற்றுள்ளது.
புகைப்படம் – https://www.facebook.com/ingaran.sivashanthan?mibextid=ZbWKwL