டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
நாட்டின் காலநிலை காரணமாக பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு.

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறண்ட காலநிலை காரணமாக, பல மாவட்டங்களில் 7,000ற்கும் அதிகமான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த 7,258 பேர் குடிநீர் இல்லாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக த தெரண ஊடகத்திற்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் மதுகம பிரதேச செயலாளர் பிரிவிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் வெலிகெபொல, எஹெலியகொட, கலவான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்களும் இவ்வாறு குடிநீர் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.