பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை அடையாளம் காணும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணையில் விடுவிக்க உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ “KRISH” பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகைகள் இன்று (வெப்ரவரி 18) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டவேளை உயர் நீதிமன்ற நீதிபதியால் பிரதிவாதி நாமல் ராஜபக்ஷவிற்க்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.