இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
நாமல் ராஜபக்ஷவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷவை கட்சித்தலைமை காரியாலயத்துக்கு சென்று இன்று (வெப்ரவரி 14) சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமன்ன, சி.பி. ரத்நாயக்க, ஜயந்த கெட்டகொட மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக ஆகியோரும் கலந்துகொண்டனர்.